tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை தாக்கலாகியுள்ளது.

ச.சா - மேலும் வளப்படுத்துறதா... நாடே நெருக்கடில இருக்குனு இருக்காதா..??
 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: திமுக கூட்டணி நடத்தும் கையெழுத்து இயக்கம் மூலம் தேச விரோதிகள் யார் என்பது தெரிந்துவிடும்.
ச.சா - கையெழுத்து போடாதவங்க தேச விரோதிகளோ..??
 

அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் அஹி: பட்ஜெட்டால் அந்நிய முதலீடு அதிகரிக்கும்.
ச.சா - மறைமுகமா நிறைய சலுகைககள் அந்நியர்களுக்கு தந்துருக்காங்களோ..??
 

தமிழக அமைச்சர் உதயகுமார்: நாட்டின் சொத்தாகிய இளைஞர்களை திசை திருப்ப சில சக்திகள் செயல்படுகின்றன.
ச.சா- கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசிட்டுருக்குறத சொல்றாரோ..??

;