tamilnadu

img

7 கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...  

திருவனந்தபுரம் 
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பரவமழை தீவிரமடைந்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு கடந்த ஒருவாரமாக ரெட் அலர்ட் எச்சரிக்கையை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இடுக்கி உட்பட மேலும் 6 கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரெட் அலர்ட் எச்சரிக்கை மாவட்டங்கள்... 

1.ஆலப்புழா

2. கோழிக்கோடு 

3. இடுக்கி 

4. வயநாடு 

5. கண்ணூர் 

6. காசர்கோடு        

7. மலப்புரம் 

இந்த மாவட்டங்களை தவிர்த்து மேலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.     

;