tamilnadu

img

மக்கள் பணம் ரூ.5 லட்சம் கோடியை சூறையாடிய மோடி அரசு

மும்பை, ஏப். 14 -கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் கோடி அளவிற்கானவராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாலும், மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் 80 சதவிகித வராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. வங்கிகளின் முக்கியப் பணியே,கடன்கள் வழங்குவதும், அதன் மூலம்கிடைக்கும் வட்டி வருவாயை ஈட்டுவதும்தான். ஆனால், இந்தியாவில்கடன்களைப் பெறும் பெருமுதலாளிகள், அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வது வாடிக்கையாகி விட்டது. மத்திய பாஜக அரசும் அதற்குஉடந்தையாக இருந்து வருகிறது.ரூ. 9 ஆயிரம் கோடி கடன்பெற்ற விஜய் மல்லையா, ரூ. 13 ஆயிரத்து 700 கோடியை சுருட்டிய நீரவ் மோடிமற்றும் மெகுல் சோக்சி, ரூ. 8 ஆயிரத்து 100 கோடி கடன் பெற்ற நிதின் சந்தேசரா ஆகியோர் மட்டுமன்றி இவர் களைப் போலவே சேத்தன் குமார், தீப்திசேத்தன், ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல் என 400-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தவில்லை.


அதானி குழுமம், லான்கோ, ஜி.வி.கே, சுஸ்லான், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைபாக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதானி குழுமம் செலுத்த வேண்டிய கடனில் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாயை, கடன் சீரமைப்புஎன்கிற பெயரில் மோடி அரசு தள்ளுபடிசெய்து விட்டதாக கூறப்படுகிறது.இவ்வாறு முதலாளிகள் பெற்ற சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான கடன்கள், கடந்த 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த 7 லட்சம் கோடிரூபாயில், சுமார் 80 சதவிகித வராக்கடன்கள் - அதாவது ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம்கோடி, மோடி ஆட்சியில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 374 கோடி ரூபாய்வராக்கடன்களும், 2017-18-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 328 கோடி ரூபாய் வராக்கடன்களும், 2018-19-ஆம் ஆண்டின் 6 மாத காலத்தில் மட்டும் 82 ஆயிரத்து 799 கோடி ரூபாய் அளவிற்கான வராக்கடன்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரைரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 603 கோடிவராக்கடன்கள் ரத்து ெய்யப்பட்டுள்ளன.

;