tamilnadu

img

பொருளாதார பாதிப்புகளே மோடியைத் தோற்கடிக்கும்

இந்தியாவின் பொருளாதார பாதிப்புகளே, நரேந்திர மோடியைத் தோற்கடிக்கும் ஆயுதமாக இருக்கும் என்று, ஆங்கில ஊடகமாக ‘தி பிரிண்ட்’ நிறுவனத்தின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அந்தக் கட்டுரையில் இடம்பெற் றுள்ள பகுதிகள் வருமாறு:

தற்போதைய பொருளாதாரச் சரிவில், நிதியமைச்சரின் சலுகைகள் அறிவிப்பால் பங்குகள் மதிப்பு உயர்ந்துள் ளது, மத்திய அரசுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. ஆனால், இந்த ஒருநடவடிக்கையால் மட்டும், இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளுமா?என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒரு அரசர் செல்லமாக ஒரு யானையை வளர்த்து வந்தார். அந்த யானை திடீரென நோய்வாய்ப்பட்டது. யானை இறக்கும் தருவாயை அடைந்ததால், அரசர் மிகவும் சோகம் அடைந்தார். அந்த யானையின் மரணச் செய்தியை தனக்கு முதலில் தெரிவிப்பவரின் தலை துண்டிக்கப் படும் என்று அரசர் அறிவித்தார். அந்த யானை மரணம் அடைந்தது. ஆனால், அதை அரசரிடம் தெரிவிக்க யாருக்கும் தைரியம் வரவில்லை.ஆயினும், இந்தச் செய்தியை அரசருகுத் தெரிவிக்க வேண்டிய கடமை,யானையின் பாகனுக்கு இருந்தது. எனவே, அவர் அரசரிடம் சென்று யானை சாப்பிடவில்லை; எழுந்திருக்கவில்லை; மூச்சு விடவில்லை என்று தெரிவித்தார். 

அரசரோ, “அப்படியானால் யானை இறந்து விட்டதா?” என்று பாகனிடம் கேட்டார். “அதை யானையைப் பார்த்துவிட்டு நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்”என்று பாகன் கூறினார்.இந்த கதையில் வரும் யானைதான், நமது இந்தியப் பொருளாதாரம் ஆகும்.அந்த யானை இறந்ததை நேரடியாகச் சொல்லாத பாகனைப் போல நமது அமைச்சர்களும் ஏதேதோ சொல்லி வருகின்றனர். ஆனால் யாருக்கும் யானை இறந்துவிட்டதைத் தெரிவிக்க தைரியம் இல்லை. அதேநேரத்தில் நமது பொருளாதாரம் முழுமையாக மரணம் அடையவில்லை என்பதையும் நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது பாகனின் நிலையில் இந்திய பங்கு வர்த்தகச் சந்தைள்ளது.கடந்த ஜூன் முதல் ரூ. 11 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிக்காததுஒன்றே தற்போதைய ஒரே நற்செய்தியாகும். இந்தியப் பொருளாதாரம் குறித்த உண்மைகள், மக்களுக்கு மூன்று வழிகளில் தெரிய வருகிறது. இதில், முதலிடத்தில் மோடி எதிர்ப்பாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் பலர் வதந்திச்செய்திகளைப் பரப்புவதால், ஓரளவுக்கு மேல் நம்ப முடியாத நிலை உள்ளது. 

அடுத்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர்கள் சந்திப்புஉள்ளது. இந்த சந்திப்புகளில் அவர்அளிக்கும் அறிவிப்புக்களின் மூலம் பொருளாதாரச் சீர்கேட்டை அரசு அறிந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது. அதிலும் வெள்ளிக்கிழமையன்று வெளியான நிதியமைச்சரின் அறிக்கை மிகவும் முக்கியமானதாகும். அவர் அறிவித்த வரிச்சலுகைகள் மற்றும் வரிக்குறைப்பினால், முதலீடுகள் அதிகரிக்கும் என்று அவரே தெரிவித்துள்ளார். ஆனால், அரசு தனது செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட எவ்வித சிக்கன நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த வருமான இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது மறைமுக வரிகள் விதிக்கப்படலாம் என்ற  அச்சமும் மக்களிடம் உள்ளது. மூன்றாவது மோடியின் அறிவிப்புக் கள் ஆகும். கடந்த 70 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த முத்தலாக் தடை, சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவற்றை மோடி நிறைவேற்றியுள்ளார். வரும் நவம்பரில் ராமர் கோயிலும் இந்த அறிவிப்புக்களில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 

ஆனால், இவையனைத்தும் பொருளாதாரச் சரிவினால், மக்கள் மத்தியில்எடுபடாமல் போகவே வாய்ப்பு உள்ளது. இந்தியப் பொருளாதாரம் சீரடைய தேவையான நடவடிக்கைகளை, மோடிஉடனடியாக எடுக்க வேண்டிய நிலையில்நாடு உள்ளது. ஏனெனில், ஒருவேளை மோடி தோற்க நேர்ந்தால், அதற்கு இந்தியப் பொருளாதாரமே காரணமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு ‘தி பிரிண்ட்’ தனது கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

;