tamilnadu

img

கலைமகள் கல்வி நிறுவனத்தில் பயிலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீதம் மட்டுமே பள்ளி, கல்லூரி கட்டணம்

தரங்கம்பாடி, ஜூலை 26- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ விலை தலைமையிடமாகக் கொண்டு மயிலா டுதுறை, ஆக்கூர், திருக்கடையூர், ஆயப்பாடி, திருவிளையாட்டம், கீழப்பெரும்பள்ளம், மே லையூர், மன்னம்பந்தல், சங்கரன்பந்தல், வான கிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட  பள்ளி, கல்லூரிகளை நிறுவி ஏழை,எளிய, நடுத்தர மக்களின் கல்வி சேவையை குறைந்த  கல்விக் கட்டணத்தில் பூர்த்தி செய்து வரு கிறது கலைமகள் கல்வி நிறுவனம்.  அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமையிலான குழுவி னர் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளுக்கு பல  கி.மீ தொலைவாக இருந்தாலும் மக்களுக்கு தே வையான உணவு, உடை, இருப்பிட வச திக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு சென்று அங்கேயே முகாமிட்டு உதவி அளிப்பதிலிருந்து, டெங்கு உள்ளிட்ட நோ ய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள், போக்கு வரத்து சாலை பாதுகாப்பு, வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணிகள் என முகாம்களை கிராமங்கள்  தோறும் தொடர்ந்து செய்து வருவதில் கலை மகள் கல்வி நிறுவனம் எப்போதும் முதலிடமே  வகிக்கிறது.

பாரம்பரிய கலைகள், தனித்திறன் போட்டி கள் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகை யில் சிலம்பம், கோலாட்டம், கரகாட்டம், பறை யாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பார ம்பரிய கலைகளை ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு கற்றுத் தருவதோடு போட்டி களையும் நடத்தி பரிசுகளையும், சான்றி தழ்களையும் வழங்கி வருகிறது.  அரசுப் பொதுத் தேர்வெழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரம் நீட்டி ஊக்குவிக்கும் வகையில் மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த பள்ளிகளுக்கே சென்று  மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. குறிப்பாக நல்லாடை, காவிரி பூம்பட்டிணம், திருவெண்காடு, ஆறுபாதி, கீழை யூர், வடகரை, மயிலாடுதுறை, மூவலூர், எருமல்,  திருவிளையாட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலுள்ள 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்  மற்றும் அரசு உதவிப்பெறும்  பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பொதுத்தே ர்வை அச்சமின்றி, எதிர்கொள்வது எப்படி என்றும்  தேர்வுக் குறித்த சந்தேகங்களை மாணவர்க ளிடம் போக்கும் வகையில் தன்னம்பிக்கை யூட்டும் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பள்ளிக ளுக்கும் நேரில் சென்று பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவித்தது.

தங்களது பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கல்வி சேவையை அளிக்காமல்,அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் போல் நினைத்து கல்வியை பெரும் சேவை யாக கருதி நல்சேவையாற்றுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்க ப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஏழை,எளிய குடும்பங்க ளுக்கு இதுவரை நிவாரணப் பொருட்களை வழ ங்கியதோடு, தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கி  வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பொ ருளாதார பின்னடைவை சந்தித்து வருவதை உணர்ந்த கலைமகள் கல்வி நிறுவனம் மற்ற தனி யார் பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக தூய்மைப்  பணியாளர்களின் பிள்ளைகள் கல்வி கட்ட ணத்தில் 50 சதவீதம் கட்டினால் போதும் என அறி வித்துள்ளது. அதேபோன்று மருத்துவர்கள், செவிலி யர்கள், காவலர்களின் குழந்தைகள் பயில 70 சத வீதம் கட்டணம் செலுத்தினால் போதும் என்று  அறிவித்துள்ளது. இச்சலுகை நர்சரி வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை என்பது குறிப்பி டத்தக்கது.

;