tamilnadu

img

நாளை மீனாட்சி திருக்கல்யாணம்... இணையத்தில் பார்க்க ஏற்பாடு

மதுரை
கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவிற்கு அரசு  உத்தரவிட்டதால் வழிபாட்டு ஸ்தலங்களும் மக்கள் கூடுவதை தவிர்க்க மூடப்பட்டது சில முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் வழிபாட்டு ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்து நடைபெற்று வரும்நிலையில் மதுரையின் முக்கிய நிகழ்வான சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் திங்களன்று நடைபெறுகிறது 

திருக்கல்யாண நிகழ்வுகளை இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான www.tnhrce.gov.in திருக்கோவில் இணையதளமான www.maduraimeenakshi.org முகநூல் பக்கத்திலும் மற்றும் திருக்கோவில் youtube அலைவரிசையிலும் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பிரார்த்தித்து தரிசனம் செய்ய திருக்கோவில் நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திங்களன்று  காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  நடைபெறுகிறது .
 

;