tamilnadu

img

30 லட்சம் பாஸ்ட் டேக்குகள் விநியோகம்: பே டிஎம் சொல்கிறது

மும்பை:
அதிகபட்சமாக 30 லட்சம் பாஸ்ட் டேக்குகளை வினியோகம் செய்திருப்பதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை ரொக்கமாக வழங்குவதை தவிர்த்து ஆன்லைன் முறையில் உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் வாகனத்தில் ஒட்டுவதற்காக வழங்கப்பட்டு வருகின்றன.வரும் 15 ஆம் தேதி முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் 30 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை வழங்கியிருப்பதாக வங்கியாக செயல்படும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 சதவீத பாஸ்ட்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் மாதத்திற்கு இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் பேடிஎம் அறிவித்துள்ளது.

;