what-they-told

img

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

சென்னை, ஆக. 28- 2019 ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்தி கள் உலா வந்தன.  மின்வாரியம்  2017 -18 ஆம் ஆண்டுகளில் ரூ.7760 கோடி நட்டமடைந்ததாகவும், நிதி ஆண்டு முடிவடைவதற்குள் இந்த தொகை ரூ.13,350 கோடி யாக உயரலாம் என்றும் அதை  ஈடுகட்ட ரூ.20,000 கோடி அள விற்கு கட்டணம் உயர்த்தப்பட லாம் என்றும் கூறப்பட்டது. அதா வது 500 யூனிட்டுகளுக்கு மேல் நுகரும் வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்தும் ரூ.6.60  பைசா கட்டணத்தை ரூ.8.40 பைசா வாக உயர்த்த உள்ளதாகவும் செய்திகள் வந்தன. 2017-18 ஆம் ஆண்டு தொழிற்  சங்கங்கள் போனஸ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த போது வரவு - செலவு கணக்கை  நிர்வாகம் அளித்தது.

அப்போது மின் வாரியத்தின் வருமானம் 62,30,931 கோடி ரூபாய் என்றும்  அந்த ஆண்டு செலவு ரூ.58,64,214 கோடி என்றும் செயல்பாட்டு வரு மானம் ரூ.3,66,717 கோடி என்றும்  சொல்லப்பட்டது. அதன் அடிப்ப டையில் மின்வாரியத்தின் லாபம் ரூ.3,66,717 கோடி என்று கணக்கு சொல்லப்பட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் மின்வாரியத்தின் நட்டம் ரூ.7,760 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதை ஈடு  செய்ய மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாகவும் செய்தி கள் வந்தன. தமிழகத்தில் ரூ.20,000 கோடி அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் அத னால் நடுத்தர மக்கள், சிறு, குறு  வியாபாரிகள் பாதிக்கப்படு வார்கள் என்று ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தொடர்ச்சி யாக செய்திகள் வெளிவந்த போது மின்துறை அமைச்சர்  தங்கமணி தமிழகத்தில் மின்  கட்டணம் உயர்த்தப்படமாட் டாது, ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுவதாக  அறிக்கை வெளியிட்டார்.

ஒரு மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்த வேண்டும் என்றால் அம்மாநிலத்தின் மின் வாரியம் அந்த ஆண்டின் வரவு, செலவு கணக்கை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்  பித்து ஒழுங்கு முறை ஆணைய மும் வரவு,செலவு கணக்கைப்  பரிசீலித்து நட்டம் என்றால் மின்  கட்டணத்தை உயர்த்துவ தற்கும், லாபம் என்றால் மின்  கட்டணத்தைக் குறைப்பதற் குண்டான நடவடிக்கைகளை எடுத்து அவைகளை அறிவிப்பாக  ஒழுங்குமுறை ஆணையம் வெளி யிடும். இது தான் சட்டப்படியான நடைமுறை. தமிழகத்தில் தமிழக மின் வாரி யம் ஒழுங்கு முறை ஆணையத்தி டம் ஆண்டின் வரவு,செலவு கணக்கை அளித்து மின் கட்ட ணத்தை உயர்த்தி தாருங்கள் என்ற கோரிக்கையை மின்வாரி யம் வைத்தாகத் தெரிய வில்லை. தற்போது தமிழக  மின்வாரியத்தில் கடுமையான  நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வும் அதை ஈடுசெய்ய 30 சதவீத மான மின் கட்டண உயர்வு என்பது  தவிர்க்க இயலாது என்றும் பத்திரி கையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அக்டோபர் மாதம் 2018-ன்  கணக்கு அடிப்படையில் மின்வாரி யத்தில் செயல்பாட்டு வருமானம் ரூ.3,66,717 கோடியாகும். இருப்  பினும் மின்வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி அதை ஈடு செய்ய மின்கட்டணம் உயரப்போகிறது என்று மீண்டும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  மின் வாரியத்தின் செயல் பாடு, நிதிநிலை பராமரிப்பு போன்றவற்றில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை  என்று யூகிக்க வேண்டியுள்ளதால் தமிழக அரசும் மின்வாரியமும் வாரியத்தின் நிதிநிலை, செயல் பாடு தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் இந்த  குழப்பங்களுக்கு விடை கிடைக் கும் என்று தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பு கூறியுள்ளது.

;