world

img

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை தொற்று பரவத் தொடங்கியதும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.60 கோடியாகவும் பலியானவர்கள் எண்ணிக்கை 8.26 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

;