world

img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த 28 ஊழியர்களை நீக்கிய கூகுள்

இஸ்ரேல் அரசு  பாலஸ்தீனர்களை கண் காணிக்கவும் இனப்படுகொலை செய்ய உதவும் வகையிலும் பல தொழில் நுட்ப திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை கூகுள்,அமேசான் உள்ளிட்ட நிறு வனங்களுடன்  ஏற்படுத்தி வருகிறது.   அதன்படி 120 கோடி அமெரிக்க டாலர் கள் மதிப்பில்  நிம்பஸ்  ஒப்பந்தத்தை  அமே சான் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதர வாகவும் , அமேசான் நிறுவனத்திற்கு  எதி ரான போராட்டங்கள் நடத்தியதாகவும்   28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. நியூயார்க் மற்றும் சன்னிவேல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள  கூகுள் நிறு வனத்தின் அலுவலகங்களில்  உள்ளிருப் புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது ஊழி யர்களை போலீசார் வலுக்கட்டாயமாக  கைது செய்துள்ளனர்.   மேலும் கூகுள் நிறுவனத்தின்  தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன  ஊழியர்கள் பணியிடத்திலிருந்து அரசிய லை ஒதுக்கி வைக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. அரசியல் பேசுவது ஒவ்வொரு மனி தனின் அடைப்படை உரிமை, அதை நீங்கள் கட்டுப்படுத்துவது தனி மனித உரிமைக ளுக்கு எதிரானது என சுந்தர் பிச்சை மீது கடுமையான விமர்சனங்களை தொழிலா ளர்கள் முன் வைத்து வருகின்றனர். 

;