world

img

மோடி ஆட்சியில் தான் அதிக மனித உரிமை மீறல்கள் : அமெரிக்கா அறிக்கை

நியூயார்க்,ஏப்.26-  அமெரிக்கா ஆண்டு தோறும் உலக நாடு களில் நடைபெறும் மனித உரிமைகள் குறித்த  அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை யின் ‘2023-ஆம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில், மோடி ஆட்சியில் தான் இந்தியா வில் அதிக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளது. கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை, நீதிக்குப் புறம்பானப் கொலைகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் , கடுமையான சிறைத் தண்டனை, காரணங்கள் ஏதும் இன்றிய கைது நடவடிக்கைகள் ஆகியவற்றையும் இந்தியாவின் எல்லை  கடந்த அடக்குமுறை என்ற தலைப்பில்  பத்திரிகையாளர்கள், புலம்பெயர்ந்த மக்கள் ஆகியோருக்கு  கொடுத்த நெருக்கடிகள் ஆகியவை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி தகவல்களை உண்மை எனக் கூறி தாக்குதல் நடத்துவது, சமூக ஊடகங்களிலும் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது   உள்ளிட்ட வைகளையும்  எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்தும் அமெரிக்காவின்  இந்த அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    குறிப்பாக 2016 - 2022 வரை பாஜக ஆளும்  உ.பி, சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்பட்டுள்ள  800க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் ,  மணிப்பூர் இன வன்முறை, ஆயுத மோதல், வீடுகள், வணிக  மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழித்தது,  பாலியல் வன்கொடுமைகள், மேற்கு வங்கத்தில்  ஊரக  கவுன்சில் தேர்தலுக்கு முன்னதாக 52 பேர்  படுகொலை செய்யப்பட்ட தேர்தல் வன் முறை, ஜம்மு-காஷ்மீர்,  மணிப்பூர் மற்றும் வட கிழக்கு உள்ளிட்ட மக்கள் பாதித்த  மாநிலங் களுக்கு ஐ.நா அதிகாரிகள்  சென்று ஆய்வு செய்யவிடாமல்  முட்டுக்கட்டை போட்டது, குஜ ராத் படுகொலை குறித்தான ஆவணப்படத்தை திரையிட விடாமல் பாஜக அரசு ஏவிய அடக்கு முறை தடைகள் மற்றும் திரையிட்ட மாணவர் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தது என அனைத்தையும் ஆய்வில் இணைத்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  மனித உரிமையை மீறும்  அமெரிக்கா - இஸ்ரேல் இந்தியாவின் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அதே வேளை யில் அமெரிக்கா தனது சொந்த மாணவர்கள் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறை மூலம் மிக  மோசமான அடக்குமுறைகளை ஏவியுள்ளது.  இஸ்ரேல் நாடோ எல்லை கடந்து அமெரிக்க மாணவர்களை உளவுத்துறை மூலம் மிரட்டியுள்ளது. ஏப்ரல் 22 அன்று இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் அதன் அதி காரப்பூர்வ எக்ஸ் கணக்கில்  பாலஸ்தீனத் திற்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க மாண வர்களுக்கு கல்வியும் வேலை வாய்ப்பும் பறிக்கப்படும் என மிரட்டி பதிவிட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. 

;