world

img

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவு 3வது முறையாக பொதுச்செயலாளர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங், அக்.23- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது  தேசிய மாநாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு வார காலம் நடந்த இந்த  மாநாட்டில் அடுத்த ஐந்து ஆண்டு களுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகத் தேர்வு செய்யப் பட்ட மத்தியக்குழுவின் முதல் கூட்டத்தில் 203 உறுப்பினர்களும், 168 மாற்று உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தற்போதைய பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அரசியல் தலைமைக்குழுவிற்கு 24 பேரும், நிலைக்குழுவுக்கு ஏழு பேரும், மத்தியக்குழுவின் செயற்குழுவிற்கு ஏழு பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.   பொறுப்பாளர்கள் தேர்வுக்குப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 20வது தேசிய மாநாட்டுக்குப் புகழாரம் சூட்டிய ஜி ஜின்பிங், ஒற்றுமையையும், அர்ப்பணி ப்பையும் முன்னிறுத்தும் மாநாடாக இருந்தது. இதுவரையில் ஈட்டிய சாதனை களை உயர்த்திப் பிடித்ததோடு, அனைத்துப் பலத்தையும் ஒருமுகப்படுத்திய மாநாடு என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார். வீரியமுள்ளதாக மாற்றுவோம் மேலும், “அடுத்த கட்டத்தை நோக்கி  நகருகையில் சுயசீர்திருத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் கட்சி நிலைத்து நிற்கும். எவ்வளவு தான் சிறந்த கடந்த காலம் இருந்தாலும் சுய சீர்திருத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். கடந்த நூற்றாண்டின் புரட்சிகரப்  பாதையில் துன்பங்களைத் தாண்டி வந்திருக்கிறோம். புதிய சகாப்தத்தின் முதல் பத்தாண்டுகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மேலும் பலப்படுத்தியிருக்கின்றன” என்றார்.  கட்சியை மேலும் வளர்ப்பது பற்றிப் பேசிய ஜி ஜின்பிங், “உலகிலேயே மிகப்பெரிய கட்சியான, நூற்றாண்டு கால சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை சுயசீர்திருத்தம் மூலமாக மேலும் வீரியமுள்ளதாக மாற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மக்களைத் தாங்கிக் கொள்ளும் வலுவான முதுகெலும்பாக கட்சி இருத்தல் அவசிய மாகும்” என்று வலியுறுத்தினார்.

;