world

img

காசாவில் 78 ஆண்டு பழமையான மருத்துவமனையை தரைமட்டமாக்கிய இஸ்ரேல் ராணுவம்

காசா, ஏப். 2 - பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா மீது இனஅழிப்பு நோக்கத்துடன் கடந்த 7 மாதங் களாக அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வரு கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதலில் காசாவில் இதுவரை 32,845  பேர் (திங்களன்று நிலவரம்) கொல்லப் பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சொந்த  நாட்டிலேயே உணவின்றி அகதிகளாக உயி ரைக் கையில் பிடித்துக் கொண்டு நாளைக் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், காசா நகரில் மிகவும் புகழ்பெற்ற அல் ஷிபா மருத்துவமனையை யும் இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கி யுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட, 78 ஆண்டுகள் பழமையான மருத்துவ மனையான இந்த அல் ஷிபா மருத்துவமனை யில் 700க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.  இஸ்ரேல் ராணுவ தாக்குதலால் படுகாய மடைந்த காசா மக்களின் உயிரைக் காப்பாற்றி யும், இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் இந்த மருத்துவமனை வளாகம் ஒரு தடுப்பு அரணாக இருந்தது. 

தங்களது இன அழிப்புக்கு எதிராக இந்த மருத்துவமனை உள்ளது என கருதிய இஸ்ரேல் ராணுவம் அல் ஷிபா மருத்துவமனை மீது கடந்த 10 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனை மீது மட்டுமின்றி சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில், 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மறைவான இடத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

போரை ஆதரிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்திடுக!
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். பாலஸ்தீன சுகாதாரத்திற்காக நீண்டகாலமாக போராடி வரும் நார்வே நாட்டின் தன்னார்வலரும், மருத்துவருமான மேட்ஸ் கில்பர்ட்டினின் வீடியோ தொகுப்பைச் சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் சீத்தா ராம் யெச்சூரி, “இது ஒரு மூர்க்கத்தனமான மனி தாபிமானமற்ற இனப்படுகொலையைத் தவிர வேறென்ன சொல்வது? இஸ்ரேல் உடனடியாக காசா மீதான போரை இப்போதே நிறுத்த வேண்டும். முக்கியமாக உடனடி போர்நிறுத் தம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாது காப்புக் கவுன்சில்  தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் போரை ஆதரிக்கும் அனைத்து நாடுகளின் மீதும் ஐநா பொருளா தாரத் தடைகளை விதிக்க வேண்டும். இது இஸ்ரேலிய இனப்படுகொலை” என குற்றம்சாட்டியுள்ளார்.

;