tamilnadu

தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்: இரா. முத்தரசன்

சென்னை, ஏப்.16-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாட்டின் நலன் களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் என தனது தேர்தல் அறிக்கையில் அதிமுக பட்டியல் போட் டுள்ளது. மத்தியில் மோடி ஆட்சியைத் திரும்பக் கொண்டு வரப் போவதாகவும் அது கூறுகிறது. ஆனால் வாக்குப் பதிவு நடப்பதற்கு முன்பாகவே, அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச் சர்கள் கூறி வருகிறார்கள். நீட் தேர்வு முறையைக் கைவிட வலியுறுத்தப்படும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால், நீட் தேர்வு தொடரும், கறாராக அமலாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டம் கைவிடப்படும் என்கிறது அதிமுக அறிக்கை. ஆனால், மத்திய அமைச்சரான நிதின் கட்காரி, விவசாயிகளை சமாதானப்படுத்தி, பாரத்மாலா பரியோஜன் திட்டத்தின் கீழ் அந்த எட்டு வழிச் சாலை போடப்பட்டே தீரும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.ஏற்கனவே, காவிரி ஆற்றின் குறுக்காக கர்நாடகத்தில், மேகதாது அணையைக் கட்டுவதற்கான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அணை கட்டினால் காவிரிக்கு, இப்போது தானாக வந்து கொண்டிருக்கும் மழைநீர் கூட வராமல் தடுக்கப்பட்டுவிடும்.தமிழக நலனுக்கான அதிமுக கோரிக்கைகளை, தேர்தல் முடியும் முன்பே, ஆட்சி அமையும் முன்பே, அமலாக்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.பின்னர், எதற்காக பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு, மோடி ஆட்சியைக் கொண்டுவருவோம் என வீதி வீதியாய் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்கும், அவரது கூட்டணி ஏன் நீடிக்க வேண்டும் என்பதற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறவேண்டும்.இவ்வாறு அந்த அறிக் கையில் வலியுறுத்தியுள்ளார்.

;