1.5 கோடி பெயர்கள் நீக்கம் ஜனநாயகத்தின் வேரில் பாய்ந்த கொடுவாள்
9 Aug 2026, 8:57 pm

1.5 கோடி பெயர்கள் நீக்கம் ஜனநாயகத்தின் வேரில் பாய்ந்த கொடுவாள்

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR)மூன்றாம் கட்ட நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. 16மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இந்த எஸ்ஐஆர் மூன்றாம் சுழற்சியில், வரைவுப் பட்டியல்கள் வெளியிடப் பட்டுள்ள 12 மாநிலங்களில் மட்டும் மொத்தமுள்ள வாக்காளர்களில் 11.51 சதவீதப் பெயர்கள் அதாவது 1,58,59,834 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.வசிப்பிட மாற்றம், இறப்பு மற்றும் பல இடங்களில் பெயர்கள் இருத்தல் போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும்,பெருமளவில் மக்களின் வாக்குரிமைப் பறிக்கப்பட்டு வருவது ஜனநாயக சக்திகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 44.89 லட்சம் பெயர்கள் (10.78%) நீக்கப்பட்டு, மொத்தவாக்காளர் எண்ணிக்கை 4.16 கோடியிலிருந்து 3.71 கோடியாகச் சுருங்கியுள்ளது. இதில் முகவரியில் இல்லாதவர்கள், இறந்தவர்கள் மற்றும் பல இடங்களில் பதிவானவர்கள் எனப் பல்வேறுகாரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும், ஜார்க்கண்ட் (43.62 லட்சம்), ஹரியானா (33.83 லட்சம்) மற்றும் ஒடிசா (20.12 லட்சம்) போன்ற மாநிலங்களிலும் லட்சக்கணக்கானமக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தாதர் மற்றும் நாகர் ஹவேலி,டாமன் மற்றும் டையூ போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 29.64 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தில்லி,பஞ்சாப், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கணக்கெடுப்புப் பணிகள்நீட்டிக்கப்பட்டு வருவது மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தன்னிச்சையான மற்றும் அவசரமான நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையேகடுமையான மோதல்களை உருவாக்கியுள்ளது டன், நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்தமார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளின் செல்லுபடியை உறுதி செய்திருந்தாலும், களத்தில்லட்சக்கணக்கான ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயர்கள் தங்களின் அனுமதியின்றிப்பட்டியலிலிருந்து விடுபடுவது அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் கொடூரச் செயலாகும்.

மக்களாட்சியின் அடித்தளமே தடையற்றவாக்குரிமைதான். ஆனால், நிர்வாகத் திருத்தங்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது, வாக்களிக்கும் உரிமையைப் பலவீனப்படுத்தும் எதேச்சதிகாரப் போக்கின்வெளிப்பாடாகும். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் விழிப்புடன் போராடவேண்டிய தருணமிது.