பிரிவு
பிற செய்திகள்
மேலாண்மை இயக்குநர் த.வேல்முருகன்
50 minutes before • நமது நிருபர்
மேலாண்மை இயக்குநர் த.வேல்முருகன் பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி இராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகிறார்
51 minutes before • நமது நிருபர்
புதுதில்லி, ஜூலை 31 -சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை துறைமுகத்திலிருந்து கனிம ஏற்றுமதியில் புதிய சாதனை!
1 hour before • நமது நிருபர்
சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 46,000 மெட்ரிக் டன் பேரைட்ஸ் கனிமம் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் வார்ப்பு இரும்பு கையாளுதல் மற்றும் புதிய கிரேன்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

திருமயிலை முதல் போட்கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணி துவங்கியது
1 hour before • நமது நிருபர்
சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்தில் திருமயிலை முதல் போட் கிளப் வரை சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. கழுகு இயந்திரம் மூலம் 2,274 மீட்டர் தூரத்திற்கு இப்பணி நடைபெறுகிறது.

சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைவரும் திரள்க!சென்னை தர்ணா போராட்டத்தில் உ.வாசுகி அறைகூவல்
1 hour before • நமது நிருபர்
சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கும் ஒன்றிய அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து சென்னையில் தர்ணா நடைபெற்றது. இதில் உ.வாசுகி பங்கேற்று, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.60 லட்சம் நிலம் விற்பனை: நிலத்தரகர் கைது
1 hour before • நமது நிருபர்
போலி ஆவணங்கள் தயாரித்து 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த நிலத்தரகர் ஜானகிராமனை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட ஏழுமலை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்
1 hour before • நமது நிருபர்
ராணிப்பேட்டை ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் கல்வி வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சம்புவராயநல்லூர் கிராமத்திற்கு குடிநீர், தெருவிளக்கு வசதி செய்யக் கோரிக்கை!
1 hour before • நமது நிருபர்
சம்புவராயநல்லூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தெருவிளக்கு இன்மை குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலமானார்
1 hour before • நமது நிருபர்
திருத்தணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.ரீசர் தாயார் வள்ளிவடிவேலு (76) காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் சந்திப்பு கூட்டம்...
1 hour before • நமது நிருபர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் ‘என் பட்டு என் பெருமை 2.0’ திட்டத்தின் கீழ் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டு வளர்ப்பு பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து விஞ்ஞானிகள் ஆலோசித்தனர்.

பயிர் கடன் ரத்து கோரி விவசாயிகள் தாலியைக் காட்டி போராட்டம்
1 hour before • நமது நிருபர்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பயிர் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் தாலியைக் காட்டி நூதன போராட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்புத் துணி கட்டி முழக்கமிட்டனர்.

வாலாஜா மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
1 hour before • நமது நிருபர்
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மாணவிகள் உறுதியேற்றனர்.

