முந்தய பக்கம்

ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள்

9 hours before
ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள்

ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள்

நாமக்கல், செப்.14-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆர்.கவுண்டம்பாளையம் ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள் முறையின்றி கொட்டப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கவுண்டம்பாளையம் ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இதனால் ஏரி பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் சேகரித்து, விதிமுறைகளின்படி பாதுகாப்பாக அகற்ற வேண்டிய நிலையில், ஏரி பகுதியில் அவை முறையின்றி கொட்டப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், மருத்துவக் கழிவுகளை ஏரி பகுதியில் கொட்டியவர்கள் யார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிப்பு மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram