பாலக்கோட்டில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல்
9 hours before

பாலக்கோட்டில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல்

தருமபுரி, செப்.14–தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பாலக்கோட்டில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஒகேனக்கல் செல்லும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி இந்நகரைக் கடந்து செல்கின்றனர்.

முறையான போக்குவரத்து கண்காணிப்பு இல்லாததால் ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம், எம்.ஜி. ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவசர ஊர்திகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒரு சார்பு ஆய்வாளர் (SI) மற்றும் இரு காவலர்கள் பணியில் இருந்தனர். தேர்தல் காலத்தில் பிற பணிக்கு மாற்றப்ரும் மீண்டும் இங்கு நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும், குறுகலான கடைவீதி மற்றும் பேருந்து நிலையச் சாலைகளில் வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதும் நெரிசலை அதிகரிக்கச் செய்கிறது.

எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் முக்கிய சந்திப்புகளில் உடனடியாகப் போக்குவரத்து காவலர்களை நியமித்து, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்டக் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.