தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

10 hours before
கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

கோவை, செப்.14-கோவை, தருமபுரி மற்றும் நீலகிரியில் செய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் திங்கள் மற்றும் செவ்வாயன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் நிலவிய நிலையில், மதியம் திடீரென கனமழை பெய்தது. இதனால் வால்பாறை பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களுக்கு சென்றனர். மேலும், வால்பாறை அருகே நல்லகாத்து பாலத்தில் மழைநீர் தேங்கியது.தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பாலத்தில் உள்ள அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்து, மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலைப் போன்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் வெயிலில் தாக்கத்தினால் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், திங்களன்று பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது வருகிறது. பென்னாகரம் பேருந்து நிலையம், பி.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, குள்ளாத்திரம்பட்டி, , மடம் சோதனைச் சாவடி, ஒகேனக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பமும் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும்,கனமழையால் விவசாயப் பணிகளுக்கு சாதகமானசூழல்ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அருவங்காடு, கொலக்கம்பை வண்டிச்சோலை சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், திங்களன்று சுமார் ஒரு

நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், தேயிலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குன்னூரில் குடிநீர் பஞ்சம் தீரும் நிலை உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.