தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பராமரிப்பின்றி சீரழியும் பள்ளிபாளையம் பொது மயானம்

10 hours before
பராமரிப்பின்றி சீரழியும் பள்ளிபாளையம் பொது மயானம்

பராமரிப்பின்றி சீரழியும் பள்ளிபாளையம் பொது மயானம்

நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிபாளையம் நகராட்சியில், காவிரி ஆற்றங்கரையோரம் இயங்கிவரும் பொது மயானம் போதிய பராமரிப்பின்றிச் சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

பள்ளிபாளையம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் தகனம் செய்யவும் இந்த மயானத்தையே பெருமளவில் நம்பியுள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் மின் மயானம் இருந்தபோதிலும், உள்ளூர் மக்களின் முதன்மை தேவையாக இந்த நகராட்சி மயானமே விளங்குகிறது. ஆனால், கடந்தபல ஆண்டுகளாகவே எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் ஆபத்தான சூழலிலேயே இது இயங்கி வருகிறது.

விஷ ஜந்துக்களின் நடமாட்டம்மேலும், மழைக்காலங்களிலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் நீர் நேரடியாக மயானத்திற்குள் புகுந்துவிடுகிறது. இதனால் உடல்களைத் தகனம் செய்யமுடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதிகளில் புதர்கள் மண்டிப் போய் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடும் பழுதடைந்த மோட்டாரும்மயானத்தில் போதுமான குடிநீர் வசதியும் இல்லை. உடலை அடக்கம் செய்த பின்னர் உறவினர்கள் சடங்குகள் செய்து குளிப்பதற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. மயானத்தில் உள்ள மின்மோட்டார் நீண்டநாட்களாகப் பழுதடைந்துகிடப்பதுதான் இந்தத் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம். இது தொடர்பாக மயானப் பராமரிப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும்ஏற்பட்டு வருகின்றன.

மயானத்தைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி மது அருந்துவது உள்ளிட்ட சீர்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். உடல்களைத் தகனம் செய்ய அமைக்கப்பட்ட கூரைகளும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாகக் காட்சி அளிக்கின்றன.

மனிதன் வாழ்நாளின் அனைத்துச் சுக துக்கங்களையும் கடந்து இறுதியில் வந்து சேரும் மயானத்தில்கூட, ஒரு சடலத்தை முறைப்படி அடக்கம் செய்ய முடியாத நிலை இருப்பது மிகுந்தவேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த கூரைகளைச் சீரமைக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். - எம்.பிரபாகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.