தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியமா? ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

10 hours before
அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியமா?  ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியமா? ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உடுமலை, செப். 14– அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் நிலையில், ஆற்றில் 100 கனஅடிக்கும் மேல் தண்செல்வது எவ்வாறு என கேள்வி எழுப்பி அமராவதி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்களன்று ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்வளத்துறை வெளியிடும் கணக்கில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியம் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், அணையில் இருந்து ஆற்றில் கணிசமான அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அணையில் இருந்து தண்ணீர் எந்த வழியாக வெளியேறுகிறது, அது ஏன் அதிகாரப்பூர்வ கணக்கில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பிய விவசாயிகள், ஆற்றுப் பாதையில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பிரதான பாசன பகுதியை நம்பியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஆற்று நீர் வீணாகவோ முறைகேடாகவோ செல்ல அனுமதிப்பது ஏன் என அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

எனவே, அணையின் கசிவு மற்றும் மதகுகளின் நீர் வெளியேற்றத்தை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும். நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் ஆகிய விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். பயிர்களை காப்பாற்ற குறைந்தது 15 நாட்களுக்கு ‘உயிர்த்தண்ணீர்’ திறந்து விட வேண்டும். நீர் மேலாண்மை குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கதமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.