நேபாள வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல
10 hours before

நேபாள வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல

கோவை, செப். 14– நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த துயரத்திற்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறியே அடங்கியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றம்சாட்டினார்.

கோவையில் நடைபெற்ற தோழர் கே.தங்கவேல் நினைவரங்கம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகம், உழைப்பாளி மக்களின்போராட்ட மையமாகவும் மாற்றுப் பாதையைக் காட்டும் அறிவுச் சுடராகவும் செயல்படும். மறைந்த தோழர் கே.தங்கவேல் எளிமை, நேர்மை,ஆழமான வாசிப்பு கொண்டவர்; சட்டமன்றத்தில் தொழிலாளர் பிரச்சினைகளைக் கூர்மையாக எடுத்துரைத்தவர்.

நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. இதனை வெறும் இயற்கை பேரிடராகப் பார்க்கக்கூடாது;அறிவியல் பார்வையோடு அணுக வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளங்களைவகைதொகையின்றிச்சூறையாடுவதும், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சிலரின் பேராசையும், பூமிக்கடியில் உள்ள வளங்களைஅள்ளுவதால் கார்பன் வாயு அதிகளவில் வெளியாகி பூமி வெப்பமயமாவதும் தான் இத்தகையபேரிடர்களுக்குக் காரணம். இமயமலையில் பனி உருகி ஆறாக ஓடுகிறது. சில நேரங்களில் இது காட்டாற்று வெள்ளமாக மாறி துவம்சம் செய்கிறது. இத்தகைய ஏகாதிபத்திய கொள்ளைக் கும்பலை அம்பலப்படுத்துவதே நமது முதன்மையான அரசியல் கடமை.

ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ‘ஜீ’ குழுமத்தின் சுபாஷ் சந்திரா பெற்ற ரூ.22,000 கோடி கடனில், திவால் சட்டத்தைப் பயன்படுத்தி வெறும் ரூ.6.5 கோடியை மட்டும் திருப்பிச் செலுத்தினாலே போதும் எனத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், ஏழை விவசாயிகள்கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பேசும் இந்துத்துவா, இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அல்ல; அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றத்தான். நம்மை உண்டியல் குலுக்கிகள் என்று சொல்லிவிட்டு, ராமர் கோவில் உண்டியலை மொத்தமாக கொள்ளையடித்து சென்றது இந்தபரிவாரங்கள்தான்.ஏகாதிபத்தியத்தையும், கார்ப்பரேட்-இந்துத்துவா கொள்கைகளையும் எதிர்த்து இடதுசாரிகள் தொடர்ந்து போராடுவார்கள். ’தமிழ்நாடு இனி இடது பக்கம்’ என்ற முழக்கத்தோடு, தமிழகத்தை இடதுசாரிப் பாதையில் கொண்டு செல்ல உறுதியேற்போம் என்றார்.