தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 hours before
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நிலத்தடி நீர் உறிஞ்சப்பபடுவதால் அபாயம்மரங்களைக் காப்பாற்ற போராடும் விவசாயிகள்

உடுமலை, செப். 14– உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறையால்,தென்னை உள்ளிட்ட நீண்டகாலச் சாகுபடி மரங்களைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளையில்,வணிக நோக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சி எடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதாளத்திற்குச் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளாக வளர்த்த மரங்களைக் காயவிட முடியாமல், விவசாயிகள் தனியார் லாரிகள் மூலம் அதிக விலை கொடுத்துத் தண்ணீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஒரே பகுதியில் இருந்து வரம்பின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், சுற்றியுள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வருகின்றன. இன்று தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரைக் காப்பாற்றும் விவசாயிகளே, நாளைசொந்தக் கிணற்றிலும் நீர் இன்றி தவிக்கும் ஆபத்து உள்ளது.எனவே, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படும் இடங்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறி அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்ச் செறிவூட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருங்கால நீர் ஆதாரத்தையும் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பெரியார் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பா?

ஈரோடு, செப். 14– ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகப் பரவிய செய்தியை ஈரோடு மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது.வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் வழக்கமானஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், தடையை உடைத்து ஆயிரக்கணக்கான தோழர்கள் திரண்டு மாலை அணிவிக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்தியில், திராவிடர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்து ஊர்வலத்திற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளது. எனவே, அனுமதி மறுக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

உழவர் சந்தையில் ஒரே நாளில் 33 டன் காய்கறிகள் விற்பனை

நாமக்கல், செப்.14-நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், ஞாயிறன்று ஒரே நாளில் 33 டன் விளைபொருட்கள் ரூ.17.52 லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல் உழவர் சந்தையில் தினமும் அதிகாலை 5 மணி

முதல் காலை 10 மணி வரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

அதன்படி, ஞாயிறன்று (செப்.13) உழவர் சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 143 விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அன்றைய தினம் 25,635 கிலோ காய்கறிகள், 7,390 கிலோ பழங்கள், 40 கிலோ பூக்கள் என மொத்தம் 33,065 கிலோ விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை சுமார் 6,613 பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதன்மூலம் ஒரே நாளில் ரூ.17 லட்சத்து 52 ஆயிரத்து 135-க்கு விளைபொருட்கள் விற்பனையானது.

சட்டவிரோத மது விற்றவர் கைது

நாமக்கல், செப்.14-நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட எட்டிமடை புதூரில் நகர காவல் துறையினர் ஞாயிறன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கையில் பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை அடுத்து அவரது பையை சோதனையிட்டனர். இதில் 26 அரசு மதுப் புட்டிகள்இருந்ததும், அவற்றை அதிக விலைக்கு விற்க அவர் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விசாரணை செய்ததில் அவர் மைக்கேல் ராஜ் (25) என்றும், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. காவல் துறையினர் மைக்கேல்ராஜை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கடத்தல் வழக்கில் 6 பேர் கைது

சேலம், செப். 14– நரசிங்கபுரத்தில் இளைஞரை கடத்திய வழக்கில் 6 பேரை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசார், கடத்தப்பட்ட இளைஞரையும் மீட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் (27) என்பவர், புதையல் கிடைத்துள்ளதாகவும் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதனால் ஏற்கனவே கடத்தப்பட்டு தப்பிய இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற விமலை, காரில் வந்த கும்பல் கடத்திச் சென்றது. முருகன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆத்தூர் உப்புஓடை பகுதியில் சோதனை நடத்தி கார் ஓட்டுநர் ஜீவானந்தம் (31), ஸ்டீபன் (27), பிரகாஷ் (24), வெங்கடேஷ் (29), ராஜ்குமார் (42), முத்துக்குமார் (32) ஆகிய 6பேரையும் ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.பழைய பணமோசடி விவகாரத்திலேயே விமல் கடத்தப்பட்டது தெரியவந்தது. விரைவாகச் செயல்பட்டு இளைஞரை மீட்ட காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசாரைக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

விநாயகர் சிலைகளை உள்ளூரிலையேகரைக்க ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்

அவிநாசி, செப். 14–விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவிநாசி, அன்னூர் பகுதிகளில் இருந்து சிலைகள் ஊர்வலமாகச் சிறுமுகைக்கு எடுத்துச் செல்லப்படுவதால், மாலையில் கடுமையானபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

நீண்ட தூர ஊர்வலங்களால் அவசர ஊர்திகள், பொதுப் போக்குவரத்து மற்றும் இருசக்கர வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலைகளைச் சிறுமுகைக்குக் கொண்டு செல்வதைத் தவிர்த்து, உள்ளூர் நீர்நிலைகளிலேயே கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் அவிநாசி சுற்றுவட்டாரக் குளம், குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, சிலை கரைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தேர்வு செய்ய வேண்டும். காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் ஒருங்கிணைந்து அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் நீண்ட தூர ஊர்வலங்களையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியும். எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகம் இந்த மாற்று ஏற்பாட்டை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.