276 ஆவது இலக்கியச் சந்திப்பு
2 hours before
<p><strong>276 ஆவது இலக்கியச் சந்திப்பு</strong></p><p>கோவை, அக்.4-கோவையில் தமுஎகச சார்பில், 276 ஆவது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில், 276 ஆவது இலக்கியச் சந்திப்பு நிகழ்வு தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஜின்னா தலைமை வகித்தார். லக்ஷ்மி பிரியா வரவேற்றார். எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா எழுதிய ‘மர்யம்’ நாவலை அ.நெல்சன் பாபு அறிமுகம் செய்தார். செ.மு.நஸீமா பர்வீன் வாசகர் பார்வையாக தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா ஏற்புரையாற்றினார். கவிஞர் சமத்துவன் எழுதிய ‘ஒளியற்ற நிழல்கள்’ கவிதைத் தொகுப்பை கு.திலகவதி அறிமுகம் செய்தார். கவிஞர் சமத்துவன் ஏற்புரை</p><p>யாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தில் பலர் கவிதைகளை வாசித்தனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.காளிநாதன், செயலாளர் அ.கரீம், பொருளாளர் மைதிலி, மொழிப் பெயர்ப்பாளர் சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ர.சீனிவாசன் நன்றி கூறினார்.</p>
