தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட்டங்களை ஒடுக்க முடியாது

20 Jul 2026, 8:43 pm
போராட்டங்களை ஒடுக்க முடியாது

போராட்டங்களை ஒடுக்க முடியாது

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு ஜனநாயக விரோத, மக்கள் விரோத மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பல்லாயிரக்க ணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல்துறை கொடூரமான தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையா கக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயல்வது அரசியல் சட்டம் அனுமதித் துள்ள ஜனநாயக உரிமைகளில் ஒன்று. பேரணி யாக சென்றவர்கள் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடவில்லை. அமைதியாக அறவழியில் கடந்த ஒரு மாதக் காலமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் வாலி பர், மாணவர் அமைப்புகள் இந்தப் போராட் டத்தை ஆதரித்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மிகப் பெரும் கல்வி முறைகேடுகளுக்கு காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இந்திய கல்விச் சூழலை நாசமாக்கும் புதிய கல்விக் கொள் கையை கைவிட வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோ ரிக்கைகளை போராடும் இளைஞர்கள் முன் வைத்துள்ளனர்.

தில்லி ஜந்தர்மந்தரில் கடந்த ஒரு மாத காலத் திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நடந்து வந்தது. சோனம் வாங்சுக் அறவழியில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய கோரிக்கையை பரிசீலிக்க ஒன்றிய அரசு மறுத்தது. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அவரை வலுக்கட்டாயமாக அகற்றியது ஒன்றிய அரசு.

இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை தடியடி நடத்தி கலைத்ததோடு, துப்பாக்கியேந்திய போலீ சாரையும் ஒன்றிய அரசு குவித்துள்ளது. அந்தப் பகுதி முழுவதும் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட தோடு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப் பட்டன. இணைய சேவையும் முடக்கப்பட்டது. அப்படி இருந்தும் இளைஞர்களின் போராட் டத்தை ஒடுக்க முடியவில்லை. பெருந்திரளான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் சட்டம் அனுமதித்துள்ள குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட மோடி அரசு காலில் போட்டு மிதிக்கிறது. இத்தகைய அடக்கு முறைகளால் போராட்டத்தை ஒடுக்கி விட முடி யாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். முதல்கட்டமாக தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே நியாயமாக இருக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.