தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணையை விரைவில் திறக்குமா தவெக அரசு?

9 hours before
ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணையை  விரைவில் திறக்குமா தவெக அரசு?

ஆதனூர் - குமாரமங்கலம் தடுப்பணையை விரைவில் திறக்குமா தவெக அரசு?

சிதம்பரம், ஆக 25-காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் – குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.495 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை பணிகள் 2024-ம் ஆண்டிலேயே நிறைவடைந்தும், இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம் கீழணையில் இருந்து மழைக்காலங்களில் கடலில் வீணாகும் உபரி நீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு இந்த தடுப்பணை திட்டம் தொடங்கப்பட்டது. 1,064.5 மீட்டர் நீளம் கொண்ட அணையில் 12 மணல் போக்கி மதகுகள், 72 கதவணைகள் என மொத்தம் 84 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 0.334 டிஎம்சி நீரை சேமிக்க முடியும்.

இந்நிலையில், விவசாயிகள் நலன் கருதியும், மழைகாலங்களில் வீணாகும் நீரை கருத்தில் கொண்டு தடுப்பணையை உடன திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2025 சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி வலியுறுத்தினார். ஆனால், அதன் பிறகும் திமுக அரசு தடுப்பணையை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ நாகைமாலி கூறியதாவது: தடுப்பணையின் அவசியம் கருதி அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூட்டத்தொடர் முடிவதற்குள் திறக்கப்படும் என்று கூறினார். ஆனால், தடுப்பணையை திறக்க திமுக அரசு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.

தற்போது தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. டெல்டா பகுதியில் மழைகாலம் தொடங்கும் முன் இந்த அரசு விவசாயிகள் நலன் கருதி தடுப்பணையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சிதம்பரத்தில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க தலைவர் கண்ணன் என்பவரும், இந்த தடுப்பணையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு மனு அனுப்பி உள்ளார்.

பல இடங்களில் தண்ணீரை சேமிக்க தடுப்பணை, கதவணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போது நிதி இல்லாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகளின் நலன் கருதி ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணை கட்டப்பட்டும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது வேதனையாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

சட்டப்பேரவையில் எதிரொலிஇந்நிலையில் இந்த பிரச்சனையை சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஆக.25) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சிபிஎம் உறுப்பினர் லதா பேசினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.