அதியமான் கல்லூரி பேராசிரியருக்கு விருது
1 hour before
<p><strong>அதியமான் கல்லூரி பேராசிரியருக்கு விருது</strong></p><p>கிருஷ்ணகிரி, அக்.11-ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியரும் துறைத்தலைவருமான முனைவர் ஜி. பாத்திமாவுக்குகற்பித்தல் மற்றும் பொறியியல் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பாற்றியதை அங்கீகரிக்கும்வகையில்,இந்திய பொறியாளர்கள் நிறுவனம் தமிழ்நாடு மாநில மையம் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது “பொறியியல்2026”அறிவிக்கப்பட்டது.சென்னை சேப்பாக்கம் தமிழ்நாடு மாநிலமைய அரங்கில் நடைபெற்ற 59 ஆவது பொறியாளர் தின விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்குமார், முனைவர் பாத்திமாவுக்கு பொறியியல் 2026 சிறந்த ஆசிரியர் விருதை வழங்கினார்.அதியமான் பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் மருத்துவர் லாஸ்யா தம்பிதுரை,இயக்குநர் ஜி.ரங்கநாத்,முதல்வர் முனைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேராசிரியர் பாத்திமாவை வாழ்த்தினர்.</p>
