தனியார்மயத்தை கண்டித்து மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
9 hours before

தனியார்மயத்தை கண்டித்து மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தனியார்மயத்தைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வேலூர் மின் திட்டக்கிளை சார்பில் காட்பாடி காந்தி நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் எஸ்.மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நந்தகோபால், அரிராமு, சைலவாசன், ரமேஷ் பாபு, லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். திட்டக்கிளைச் செயலாளர் சின்னதுரை, பொருளாளர் முரளி கிருஷ்ணன், இணைச் செயலாளர் ஜெகன், கோட்டச் செயலாளர் ஆர்.சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

தமிழக சட்டமன்றத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட தனியார்மயக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மின் திட்டத் தலைவர் தோழர் பி.கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்குக் கோட்டச் செயலாளர் எஸ்.பூபாலன் மற்றும் திட்டப் பொருளாளர் திருஞானம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திட்டச் செயலாளர் ஜி.படவேட்டான் நிறைவுரையாற்றினார்.