தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பெல்லட் குண்டு தாக்குதல்

13 Aug 2026, 9:32 pm
ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பெல்லட் குண்டு தாக்குதல்

ஆர்டிஐ கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் எய்ம்ஸ், லோகியா மருத்துவமனைகள் பெல்லட் குண்டு தாக்குதல்

புதுதில்லிதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் சாகேத் கோகலே தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, சப்தர்ஜங், எய்ம்ஸ் (தில்லி), ராம் மனோகர்லோகியா ஆகிய 4 மருத்துவமனைகளில்,“ஜூலை 20 அன்று தில்லி நாடாளுமன்ற கட்டிடம் அருகே பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்தமாணவர்களின் விபரங்களை மற்றும் காயமடைந்த ஒட்டுமொத்த மாணவர்கள் - இளைஞர்களின் விபரத்தை தர வேண்டும்” என கோரியிருந்தார்.

லேடி ஹார்டிங்சாகேத் கோகலேவின் கேள்விக்கு பதில் அளித்த லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி,“9 பேர் பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதே போல மற்ற காயங்களுக்கு மொத்தம் 81 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 35 பேர் காவல்துறையினர், 46 பேர்போராட்டக்காரர்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

சப்தர்ஜங் சப்தர்ஜங் மருத்துவமனை,“ஒரே ஒருநபர் மட்டுமே பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற காயங்களுக்கு மொத்தம் 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தகவல் அளித்துள்ளது. எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளின் பதில்கள் இன்னும் வரவில்லை.

அதாவது ஆர்டிஐ கேள்விக்கு இரு மருத்துவமனைகளும் பதிலளிக்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளன.சாகேத் கோகலேவின் ஆர்டிஐ கேள்விக்கு முன்பு, 5 பேர் மட்டுமே பெல்லட் துப்பாக்கி காயங்களுக்கு ஆளாகியதாக ஒன்றிய மோடி அரசுதெரிவித்தது. இதன்மூலம் பெல்லட் குண்டு தாக்குதலில் 5 பேர் அல்ல ; 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்ற மோடி அரசின் அப்பட்டமான பொய் தற்போது அம்பலமாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.