முந்தய பக்கம்

சாலையில் கிடந்த ரூ.19,000 பணம்: உரியவரிடம் ஒப்படைத்து தூய்மைப் பணியாளர் நேர்மை!

14 Aug 2026, 11:49 pm
சாலையில் கிடந்த ரூ.19,000 பணம்: உரியவரிடம் ஒப்படைத்து தூய்மைப் பணியாளர் நேர்மை!
<p><strong>சாலையில் கிடந்த ரூ.19,000 பணம்: உரியவரிடம் ஒப்படைத்து தூய்மைப் பணியாளர் நேர்மை!</strong></p><p>அம்பத்தூர், ஆக. 14-அம்பத்தூர் மண்டலம் 86-வது வார்டு தூய்மைப் பணியாளர் கங்கை அம்மாள் (51), தொழிற்பேட்டை 1-வது குறுக்கு சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரத்தில் கிடந்த ரூ.19,000 ரொக்கம் இருந்த கவரைக் கண்டெடுத்தார். உடனே அவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.</p><p>அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் உள்ள தனியார் பேட்டரி நிறுவன ஊழியரின் சம்பளப் பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பணத்தை உரியவரிடம் கங்கை அம்மாள் நேர்மையுடன் ஒப்படைத்தார். பணம் பெற்றுக் கொண்ட நிறுவனத்தினர் தூய்மைப் பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். நேர்மையாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் கங்கை அம்மாளுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram