ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதியில் வாழும் பழங்குடியினரை வெளியேற்றும் முயற்சியை கைவிடுக
3 hours before

ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதியில் வாழும் பழங்குடியினரை வெளியேற்றும் முயற்சியை கைவிடுக

உடுமலை, ஆக. 22 –ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், நிலுவையில் உள்ள வன உரிமை பட்டாக்

களை முழுமையாக வழங்கிடவும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் உடுமலை கிளைச்செயலாளர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் கோட்டங்களில் உள்ள 36 குடியிருப்புகளில் காடர், மலசர், முதுவர், புலையர், எரவளர் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 1,917 குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியிலிருந்து பழங்குடி மக்களை ’மென்மையான இடமாற்றம்’ என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளை கைவிட வேண்டும். வன உரிமைச் சட்டத்தின்படி பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் கோட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்து Form A மற்றும் Form B விண்ணப்பங்களுக்கும் உடனடியாக வன உரிமை பட்டாக்களை வழங்க வேண்டும்.வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் பழங்குடியினருக்கு வேட்டை தடுப்புக் காவலர், தீயணைப்புக் காவலர் போன்ற பணிகளில் முன்னுரிமை அளிப்பதோடு, தற்காலிகப் பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். மேலும், அவர்களின் குடியிருப்புகளுக்கே சாலை, குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைத் தடையின்றி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.