‘அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு இலவச விடுதி’ ஜனநாயகத்துக்கும் சனாதனத்துக்குமான போராட்டம் தொடர்கிறது: அமைச்சர் வன்னிஅரசு பேச்சு
2 hours before

‘அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு இலவச விடுதி’ ஜனநாயகத்துக்கும் சனாதனத்துக்குமான போராட்டம் தொடர்கிறது: அமைச்சர் வன்னிஅரசு பேச்சு

சிதம்பரம், நவ.27-நமது நாட்டில் ஜனநாயகவாதிக்கும் சனாதனவாதிக்குமான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசினார்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி

மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) செல்வ நாராயணன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் இருக்கை பேராசிரியர் க. சௌந்தரராஜன் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) குமரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி

னராகக் கலந்து கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிய அரசு, அரசியலமைப்பு நாள் உறுதி

மொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் அமைச்சர் வன்னிஅரசு பேசியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலுத்தி விடுதிகளில் தங்கிப் படிப்ப தால் ஏழை, எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயில்வதில் சிரமம்ஏற்படுகிறது என கோரிக்கை வைத்தனர். எனவே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மல்லிகை மற்றும் ராணிசீதை ஆச்சி விடுதிகள் இருந்த இடத்தில் ரூ.80 லட்சம் செலவில் புதிய சமூக நீதி விடுதி கட்டிடம் அமைத்து,மாணவர்கள் கட்டண மின்றித் தங்கிப் படித்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி ஏற்றுக்கொண்ட காலகட்டத்தில் ஜனநாயகத்தை ஆதரித்தவர்களுக்கும், சனாதனக் கொள்கைகளை முன்னிறுத்தி ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்பட்ட வர்களுக்கும் இடையே கருத்தியல் மோதல் நிலவி போராட்டங்கள் நடைபெற்றது. அந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அதேவேளையில், ஜன நாயகத்திற்கு எதிராக சனாதன சக்திகள் செயல்பட்டன.

தற்போதும் இந்தியாவில் ஜன நாயகத்தை ஆதரிப்பவர்களுக்கும், ஜனநாயகத்திற்கு எதிராகச் சனாதனத்தை முன்னிறுத்துபவர்க ளுக்கும் இடையே தொடர்ந்து போரா ட்டம் நடைபெற்று வருகிறது. இதுதான் தற்போது திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது.

இதில் மாணவர்கள் எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒருவர் தாக்கப்பட்டாலோ, வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டாலோ அவர்களைப் பாதுகாப்பது அம்பேத்கர் இயற்றிய சட்டம்தான். எனவே, அனைவரும் சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சா.விமலா சிறப்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் ரா. சரண்யா வாழ்த்துரை வழங்கினார். காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி மற்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆர் எஸ் குமார் உள்ளிட்ட துறை தலைவர்கள் பேராசிரியர்கள் ஆசி ரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக உதவிப் பேராசிரியர் வீ. ராதிகா ராணி நன்றி கூறினார்.