ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய மதவெறியர்களை கைது செய்ய வேண்டும்!
37 minutes before

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய மதவெறியர்களை கைது செய்ய வேண்டும்!

மதுரை, நவ. 25 -திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தைப் பயன்படுத்தி பதற்றத்தையும் வன்முறையையும் ஏற்படுத்திய இந்து முன்னணி, பாஜக,ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களைத் தாக்க முயற்சிப்பதும், மிரட்டுவதும் கண்ட

னத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான விவகாரத்தில் இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளையும், வன்முறைச் சம்பவங்களையும் உருவாக்கி வருகின்றனர். இச்சம்பவங்கள்குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து தாக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, திரைப்பட இயக்குநர் மோகன்ஜியைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த ‘அறக்கலகம்’ ஊடகத்தின் நிறுவனர் தவத்தை, சிலர் பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்க முயன்றதுடன், அவர் தயாரித்துள்ள ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ ஆவணப்படத்தைக் குறிப்பிட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டியுள்ளனர். இதேபோன்று, செய்திசேகரிக்கச் சென்ற பிற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.

மேலும், தங்களுக்குச் சாதகமாகச் செய்தி வெளியிடாத ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவது, பேட்டி அளித்தால் சம்பந்தமில்லாத ஊடகங்களின் செய்தியாளர்களைத் தாக்க முயற்சிப்பது, குறிப்பிட்ட செய்திகளை வெளியிடக்கூடாது என்றும், வெளியிட்ட செய்திகளை நீக்க வேண்டும் என்றும்மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடகச் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் கண்ட

னத்திற்குரியவை. செய்தி சேகரிப்பதும், உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதும் ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமையாகும். அவர்களை அச்சுறுத்துவதன் மூலமாக உண்மைகளை மறைத்துவிட முடியாது.

தாக்குதல் முயற்சிக்கும், மிரட்டலுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலையிட்டு உதவியதுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுஉள்ளது.

எனவே, ஊடகவியலாளர்களைத் தாக்க முயன்றும், மிரட்டியும் வரும் நபர்களை மதுரை மாநகரக் காவல்துறையினர் உரிய விசாரணை மூலம் அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், செய்தி சேகரிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், அமைதியையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க காவல்துறையும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு வழங்க கோரிக்கைஇதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் தொடர்பான போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த ‘திபெடரல்’ இணைய ஊடகத்தின் சிறப்புச் செய்தியாளர் ஸ்ரீவத்சல் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தியின் உள்ளடக்கத்தில் கருத்து வேறுபாடு இருந்தால் ஜன

நாயக முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால், செய்தியாளர்களை அச்சுறுத்துவதும் தாக்க முயற்சிப்பதும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும்என்று மன்றம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன்,பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான சிறப்புச் சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.