அசாமில் மோசமடையும் மக்களின் இயல்புநிலை வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக
30 Jul 2026, 9:50 pm

அசாமில் மோசமடையும் மக்களின் இயல்புநிலை வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்வு ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகள்

கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை யால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இயல்புநிலை இழந்து தவித்து வருகிறது. குறிப்பாக, சிவசாகர், கோலாகாட் மாவட் டங்களில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருவதால், அசாமில் கனமழை வெள்ளத்துக்கு இதுவரை உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

வெறும் 16,500 பேருக்கு மட்டும்

மாநிலம் முழுவதும் சுமார் 3,00,031 பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் அசாம் பாஜக அரசு வெறும் 16,500 பேரை மட்டுமே மீட்டு 71 நிவாரண முகாம்களில் உணவு அளித்து வருகிறது. அதே சமயம் 30 நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்கள் மூலம் வெறும் 72,000 பேருக்கு ஒருவேளை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அசாம் பாஜக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கவ னிக்கிறது என்பதை வெளிப்படுத்த ஷூட்டிங் கிற்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரண உதவிகள் என வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வாரமாக மிதக்கும் 7 மாவட்டங்கள்

சிவசாகர், சரோடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நஹோன், பிஸ்வநாத் மற்றும் கம்ரூப் மெட்ரோபொலிட்டன் ஆகிய 7 முக்கிய மாவட்டங்கள் கடந்த ஒரு வாரமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதே போல 21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 551 கிராமங்கள் வெள்ள நீரில் சிக்கியுள்ளன. 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. 11,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, மேலும் 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடியோ மட்டுமே

புதனன்று நிவாரணம், சீரமைப்புப் பணிக ளுக்கு ஒன்றிய அரசின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் தொலைபேசியில் பேசி உறுதி அளித்த வீடியோ வெளியானது. இவ்வாறு நாள்தோறும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் வீடியோ மட்டுமே வெளியிட்டு விளம்பரம் செய்து வருகின்றன. ஆனால் வெள்ளத்தில் தத்தளித்து வரும் அசாம் மக்களை மீட்க பெரியளவில் மீட்பு பணி கள் இல்லை. இதனால் வெள்ளத்தில் சிக்கி அசாம் மக்களின் இயல்புநிலை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது.

கனமழை நீடிக்கும்

வரவிருக்கும் நாட்களில் அசாம் மாநி லத்தில் கனமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ”ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை அசாம், அரு ணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும்” என இந்திய வானி லை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெ னவே நிலைமை மோசமாக உள்ள சூழலில், இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை யால் அசாம் மக்கள் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர்.