13 இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது தாக்குதல்! வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
yesterday
<p><strong>13 இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது தாக்குதல்! வெளியுறவுத்துறை கடும் கண்டனம்</strong></p><p>புதுதில்லி, செப். 14 -ஓமன் கடற்பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற ‘எம்டி எல் கையா’ (MT El Gaia) என்ற வணிகக் கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து,13 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஒரு இந்தியரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகக் கப்பல்கள், மாலுமிகள், பொது மக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.</p>
