தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

6 hours before
சென்னை விரைவு செய்திகள்

இறகுப்பந்து போட்டியில் ஆவடி காவல் உதவி ஆணையருக்கு தங்கப்பதக்கம்

அம்பத்தூர், நவ. 28-அகில இந்திய காவல் துறையினருக்கான 2026ஆம் ஆண்டு இறகுப்பந்து போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் 36 காவல்துறை அணிகள் பங்கேற்றன.

காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை ஒரு பிரிவாகவும், துணை கண்காணிப்பாளர்கள் முதல் காவல்துறை தலைவர்கள் வரை உள்ள அதிகாரிகள் என 2 பிரிவாகவும் பங்கேற்று விளையாடினர். அதில், முக்கால் இறுதிச்சுற்று, கால் இறுதிச்சுற்று, அரை இறுதிச்சுற்று மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில், 55 வயது கலப்பு இரட்டையர் பிரிவில், தமிழக காவல்துறை சார்பில் காவல் துறை தலைவர் ராஜேஸ்வரி மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆணையர் கலியசுந்தரம் ஆகியோரை எதிர்த்து, போட்டியிட்ட இந்திய உளவுத்துறை அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் த.செந்தில்குமார், உதவி ஆணையர் கலியசுந்தரத்தை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை

செங்கல்பட்டு, நவ.28-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றி யங்களுக்குட்பட்ட 359 கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில இடங்களில் வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி யும், பொதுக் குழாய்கள் மற்றும் நீரேற்று நிலை யங்களிலிருந்து பிளாஸ்டிக் குழாய்கள் மூலமும் சட்ட விரோதமாகத் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் தெருவின் இறுதிப் பகுதி மற்றும் மேடான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் குடி நீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்கள் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்து

வதையும், நேரடியாகத் தண்ணீர் உறிஞ்சுவதையும் தவிர்த்து குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மீறி முறை கேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

தங்கம் விலை குறைவு

சென்னை, நவ.28-சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையன்று (நவ.28) கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.