சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக்கோரி மனு
1 hour before

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக்கோரி மனு

அவிநாசி, ஆக.14-அவிநாசி நகராட்சி சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக்கோரி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளியன்று கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சிக்குட்பட்ட சேவூர் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அவிநாசி நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நகராட்சி அதிகாரியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அதில், சாலையோர வியாபாரிகளுக்கு தேர்தல் நடத்தி வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும்.

சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் முடிவை கைவிட்டு, சாலையோர வியாபாரிகளின் கடைகளை முறைப்

படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பொதுத்தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் ராஜன், கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வேலுச்சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.