தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அயோத்தி : நீதியையும் திருட முயற்சி

25 Aug 2026, 8:24 pm
அயோத்தி : நீதியையும் திருட முயற்சி

அயோத்தி : நீதியையும் திருட முயற்சி

அயோத்தியில் ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பிமுன்னெடுப்பில் கட்டப்பட்ட ராமர் கோவிலில்நடந்த காணிக்கை திருட்டு - முறைகேடு வழக்குநாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தவழக்கில் உண்மையாக குற்றமிழைத்த ஆர்எஸ்எஸ் - பாஜக பின்புலம் கொண்டவர்களை உ.பி. மாநில பாஜக அரசு திட்டமிட்டே தப்பவிடுகிறது. இதுவரை இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் காணிக்கைகளை எண்ணுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே ஆவர்.

மறுபுறத்தில் அறக்கட்டளை நிர்வாகிகளான ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் வழக்கு வலையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. உ.பி. மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழு 45 நாட்களில் 70 முறைகேடு மற்றும் காணிக்கை திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளதோடு சிசிடிவிகேமிரா போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக செயல்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. உத்தேசமாக 2லிருந்து 3 கோடி ரூபாய் வரை களவாடப்பட்டிருக்கலாம் என்பதே காவல்துறை தரப்பிலான கணக்கீடு. ஆனால் பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருக்கலாம் என்பதேபக்தர்களின் குற்றச்சாட்டு.

இந்த வழக்கை முழுமையாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக அயோத்தி கோவில் காணிக்கை திருட்டை முதன்முதலில் வெளிப்படுத்தியஅபிஷேக்உபாத்யாயா என்றபத்திரிகையாளரை கைது செய்ய உ.பி. மாநில யோகி ஆதித்யநாத் அரசு துடிக்கிறது. அவரைகைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. போலீசார் தன்னையும் தனது குடும்பத்தாரையும் அச்சுறுத்துவதாகவும் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்ய முயற்சிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தை அபிஷேக் உபாத்யாயா அணுகிய நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

வேறொரு வழக்கில் அவர் மீது முதல் தகவல்அறிக்கை பதிவு செய்து தன்னை பழிவாங்கும்நோக்கத்தில் கைதுசெய்ய உ.பி. மாநில போலீசார் முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதான் உ.பி. மாநில பாஜக அரசு நீதி பரிபாலனம் செய்யும் லட்சணம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அயோத்தி கோவில் காணிக்கை திருட்டு விவாதத்தை எதிர்க்கட்சிகள் வலுவாக எழுப்பும் என்ற அச்சத்தில்நாடாளுமன்ற நடவடிக்கைகளை திசைதிருப்பியது ஒன்றிய பாஜக அரசு. உ.பி. மாநில பாஜக அரசோ குற்றவாளிகளை விட்டுவிட்டு மோசடியை அம்பலப்படுத்தியவரை கைது செய்து சிறையில் அடைத்து உண்மைக்கு மூடு திரை போட முயல்கிறது. மறுபுறத்தில் குற்றவாளிகள்தப்ப முடியாது என்று யோகி ஆதித்யநாத் வீரவசனம்பேசி வருகிறார். இவர்கள் சொல்லும் ராமராஜ்யத்தில் ராமர் கோவிலுக்கே பாதுகாப்பு இல்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.