வங்கதேச தொழிலாளர்கள் போராட்டம் 15 சதவிகித ஊதிய உயர்வுக்கு மட்டுமே திட்டம்
yesterday
<p><strong>வங்கதேச தொழிலாளர்கள் போராட்டம் 15 சதவிகித ஊதிய உயர்வுக்கு மட்டுமே திட்டம்</strong></p><p>டாக்கா,நவ.23- வங்கதேசத்தில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 15 சதவீதம் மட்டுமே உயர்த்த ஆடை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது, ஊதியத்தை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்தக் கோரிப் போராடி வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை விட மிகக் குறைவாகும். இதனால் தொழிலாளர்களின் போராட்டம் மீண்டும் தீவிர கட்டத்துக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. </p><p>உலகின் இரண்டாவது பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடான வங்கதேசத்தில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி மாற்று அது சார் துறையில் பணியாற்றி வருகின்றனர்.எச்&எம் (H&M), கேப் (Gap), வால்மார்ட் (Walmart) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு ஆடைகளைத் தயாரித்து வழங்கும் இத்துறை, அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது.இந்நிலையில், உணவு, வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்களது குறைந்தபட்ச மாத ஊதியத்தை 12,500 டாக்காவிலிருந்து 30,000 டாக்காவாக (22,468 ரூபாய்) உயர்த்த வேண்டும் எனத் தொழிலாளர்கள்வலியுறுத்தி வருகின்றனர். இந்த மாதத் தொடக்கம் முதல் நடைபெற்று வரும் இப்போராட்டத்தால் நூற்றுக்கணக் கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் தொழிலாளர்களின் மீது காவல்துறை வன்முறைகளை ஏவி வருகின்றது. இதனால்பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. இச்சூழலில், அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமார் 15 சதவீத ஊதிய உயர்வை முன்மொழியஆடை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு மேல்ஊதியத்தை உயர்த்தினால் தொழில்துறையால் தாக்குப்பிடிக்க முடியாது என கூறியுள்ளதுடன் வழக்கம் போலஉற்பத்தி செலவு உயர்வு உள்ளிட்ட பழைய காரணங்களை முன்வைத்துள்ளனர்.</p>
