தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேவையா? சுரண்டலா?

yesterday
சேவையா? சுரண்டலா?

சேவையா? சுரண்டலா?

எளிய மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் அரண்களாக விளங்க வேண்டிய வங்கிகள், இன்றைக்கு வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறித்து வருவதை மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சகம் சமர்ப்பித்துள்ள புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.

வங்கிகள் வழங்கும் ‘டெபிட் கார்டு’ பயன்பாட்டிற்காக 12 பொதுத்துறை வங்கிகள் மட்டும்2021-22-ம் ஆண்டில் வசூலித்த தொகை ரூ.3,905.50கோடி. ஆனால், 2025-26-ம் நிதியாண்டில் இது 93.7விழுக்காடு வரை உயர்ந்து ரூ.7,563.80 கோடியாகப் பெருகியிருக்கிறது! ஒரே கார்டுக்குச் செலுத்தப்படும் கட்டணம் 88.8 விழுக்காடு உயர்த்தப்பட்டு, சராசரியாக நபர் ஒருவரிடமிருந்து ரூ.115.10பறிக்கப்படுகிறது.

இதைவிடப் பெருங்கொடுமை, ஏழை எளிய மக்களின் ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை’ பராமரிப்பு நிலவரம் தான்.நாடாளுமன்றத்தில், “சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புப் பராமரிக்காததற்கு 10 பொதுத்துறை வங்கிகள் அபராதம் வசூலிப்பதில்லை” என்று நிதி அமைச்சகம்கூறுகிறது. ஆனால், உண்மை புள்ளிவிவரங்களோ முற்றிலும் வேறொரு கசப்பான நிஜத்தைச் சொல்கின்றன. 12 பொதுத்துறை வங்கிகளுமே அபராதம் வசூலித்துள்ளன; குறிப்பாக எஸ்பிஐ வங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1,598 கோடியை அபராதமாகத் திரட்டியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள் கடந்த 4 நிதியாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புப் பராமரிக்காத காரணத்திற்காக வசூலித்த மொத்த அபராதம் ரூ.10,230.75 கோடி. தனியார் வங்கிகளோ ஒரு படி மேலே போய்,ரூ.15,939.62 கோடியைச் சுரண்டியுள்ளன. இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி மட்டும் ரூ.5,668 கோடியையும், ஆக்சிஸ் வங்கி ரூ.3,786கோடியையும் மக்களின் கணக்குகளில் இருந்து அபராதமாக அள்ளியுள்ளன.

வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகையைக் கூட வைத்திருக்க முடியாத நிலையில் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் கடுமையானபொருளாதார நெருக்கடியில் இருக்கிறார் என்றுதானே பொருள்? அத்தகைய எளிய மனிதருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, அவரிடமே ‘அபராதம்’ என்ற பெயரில் எஞ்சியிருக்கும் சில நூறுகளையும் பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

“குறைந்தபட்சத் தொகைக்கான அபராதம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி வெற்று வழிகாட்டுதல்களை விடுப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி விலகிக் கொள்ளக் கூடாது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி மக்களைக் கட்டாயப்படுத்தி தள்ளிவிட்டு, பின்னர் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், கார்டுக்கும், பராமரிப்பிற்கும் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணத்தைச் சிறுகச் சிறுகக் கரைப்பதை ஒன்றிய

அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும். வங்கிகள் என்பவை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே அல்ல; அவை சமூகப் பொறுப்புமிக்கச் சேவை அமைப்புகளும் கூட.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.