முந்தய பக்கம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் தீவிரம்

1 hour before
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் தீவிரம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் தீவிரம்

திருவள்ளூர், ஆக. 5 –பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட ஹரிஹரன் பஜார் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர் நளாயினி ஆகியோரின் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் ஆ.சாமுவேல் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இராஜாக்கடை மற்றும் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு, சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைஎடுக்கப்படுவதுடன், ரூ. 1,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும்பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம்எச்சரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram