10 அம்ச கோரிக்கைகளுடன் தொடர் போராட்டத்திற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு! பீகார் நில உரிமை மாநாடு
1 Oct 2026, 10:37 pm

10 அம்ச கோரிக்கைகளுடன் தொடர் போராட்டத்திற்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு!

பீகார் நில உரிமை மாநாடு

தர்பாங்காஅகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து, பீகார்மாநில அளவிலான மாபெரும் நில உரிமை மாநாட்டை புதனன்று தர்பாங்காவில் நடத்தின.பீகாரின் 38 மாவட்டங்களில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இந்த மாநாட்டில் எழுச்சியோடு கலந்து கொண்டனர்.அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே செங்கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்திய பின் மாநாடு தொடங்கின. தொடர்ந்து, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திர பிரசாத் சிங், மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்லால் பாஸ்வான் ஆகியோர் அடங்கியதலைமைக்குழு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்மாநிலத் துணைத் தலைவர் ஷியாம் பாரதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தொடர்ந்து, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வினோத்குமார், பீகாரின் நிலப் பிரச்சனை மற்றும் நிலமறுசீரமைப்பு குறித்த 5 பக்க வரைவுத்தீர்மானத்தை முன்வைத்தார் இந்தத் தீர்மானத்தில் 10 முக்கியமான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்தத் தீர்மானத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ராமாஷ்ரய் மஹதோ வழிமொழிந்து பேசினார். டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயதொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய இணைச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின் தேசிய இணைச் செயலாளர் அவதேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

உழுபவனுக்கே நிலம்தலைவர்கள் ஆற்றிய உரையில், “தலித்துகள், சூத்திரர்கள் மற்றும் பெண்கள் நிலம் அல்லது சொத்துக்களை வைத்திருப்பதைத் தடை செய்த மனுஸ்மிருதிகாலம் தொட்டு, நிலப்பிரபுத்துவ காலம், சுரண்டல் மிகுந்த பிரிட்டிஷ் ஆட்சி, விடுதலைக்குப் பிந்தையமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு மற்றும் தற்போதைய நவதாராளமய கார்ப்பரேட் ஆதிக்கம் வரைஇந்தியாவில் நிலப் பிரச்சனை எவ்வாறு நீடிக்கிறது. ‘உழுபவனுக்கே நிலம்’மற்றும் ‘நிலமற்ற ஏழைகளுக்கு நிலம்’ வழங்கமறுக்கும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் நிலப்பிரபுத்துவ மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அவர்கள் கடுமையாக சாடினர். இந்த மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மாபெரும் தொடர் போராட்டத்தைக்நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாக, தோழர்கள் வினோத் குமார் மற்றும் ராமாஷ்ரய் மஹதோ ஆகியோர் அக்டோபர் முதல் 2027 மார்ச் வரையிலான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உறுதியான கூட்டுப் போராட்டத் திட்டங்களை சமர்ப்பித்தனர். இந்தத் தீர்மானமும், ஆறு மாத காலப்போராட்டத் திட்டமும் மாநாட்டில் கூடியிருந்த பிரதிநிதிகளால் பெரும் உற்சாகத்தோடும், விண்ணதிரும் புரட்சிகரமுழக்கங்களோடும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.