தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்துக்களுக்கும் எதிரியே!

yesterday
இந்துக்களுக்கும் எதிரியே!

இந்துக்களுக்கும் எதிரியே!

பாஜக ஆட்சி எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின்வீடுகள், மசூதிகள், தேவாலயங்கள், வழிபாட்டுத்தலங்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கையை நாசமாக்குவது நடந்து கொண்டேஇருக்கிறது.

உ.பி.இல் துவங்கிய இந்த அராஜகம் உத்தரகண்ட், குஜராத், தில்லி, மகாராஷ்டிரா, ம.பி., ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம், திரிபுரா, மே.வங்கம், ஒடிசா எனஅங்கிங்கெனாதபடி கொடுமையே அறமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

2020 முதல் தற்போது வரை ஆறாண்டுகளில் 2,166 புல்டோசர் அநீதிகள் பாஜக ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனஓர் ஆய்வு கூறுகிறது. 2024 ஆம் ஆண்டு பிரண்ட்லைன் ஏடு, கடந்த இரண்டாண்டுகளில் 1,50,000 வீடுகள்இடிக்கப்பட்டதாகவும் இதனால் 7,38,000 பேர் வீடிழந்து தவிப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் ம.பி. மாநிலத்தில் 599 வீடுகள்இடிக்கப்பட்டுள்ளன. தலைநகர் போபால் அருகே உள்ள ஐஷ்பாக் பகுதியில், ‘ஜனதா குடியிருப்பு’ என அழைக்கப்படும் அந்தப் பகுதியில்ஒருவர் மட்டும் நீதிமன்றம் சென்றதால் அவரதுவீடு தற்காலிகமாக இடிப்பிலிருந்து தப்பியிருக்கிறது. இதர 599 வீடுகளில் ஒரு சில இந்துக்கள்தவிர மற்றவை அனைத்தும் முஸ்லிம் மக்களின்வீடுகளே.

நான் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன் என்று கூறிய இந்துப் பெண்மணி ஒருவர், பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகளைமட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறி இடிப்பதால் ஐஷ்பாக் பகுதியிலும் அப்படியே நடக்கும் என்றுஎதிர்பார்த்தேன் என்று கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

அவர்களுக்கு இந்துக்கள் மீது ஒன்றும் தனிப்பாசம் இல்லை. அவர்கள் அனைத்து மக்களுக்கும் எதிரிகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டலில்ஆட்சி செய்யும் பாஜக, இந்து ராஷ்டிரம் என பிராமணிய மேலாதிக்க ஒற்றைத் தன்மை எதேச்சதிகார ஆட்சியைநோக்கியே பயணிக்கிறது.

தில்லியில் நடந்த புல்டோசர் இடிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தாகாரத் துணிந்து நின்று தடுத்து நிறுத்தினார். இத்தகைய புல்டோசர் இடிப்பு வெறுப்பு ஆட்சியை அகற்றுவதே நாட்டுக்கு நல்லது. இல்உள்ளது.

‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்றுபிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இராமலிங்க வள்ளலார் கூறிய வார்த்தைகளையே இப்போதும் கூற வேண்டியுள்ளது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகும் என்ற இளங்கோவடிகளின் கூற்றையும் இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு இந்திய நாட்டு மக்கள் பதிலாகதிருப்பித் தருவார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.