தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக ஆட்சியின் பொருளாதார தோல்வி அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் மக்கள்

yesterday
பாஜக ஆட்சியின் பொருளாதார தோல்வி அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் மக்கள்

பாஜக ஆட்சியின் பொருளாதார தோல்வி அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் மக்கள்

புதுதில்லிஇந்தியர்கள் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கடன் தகவல் நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வெளியிட்ட புதிய தரவுகள் மூலமாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்காக மக்கள் கடன் வாங்குவார்கள் பிறகு சிறிது சிறிதாக அக்கடனை அடைப்பார்கள் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. மக்கள் அன்றாட செலவுகளுக்கும், அத்தியாவசியப்பொருட்கள்வாங்குவதற்கும் அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கப்பட்ட செலவுக் கடன்கள் 34 சதவிகிதமாக இருந்தது. 2026 மார்ச் மாதம் இந்த அளவு 51 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.அ

தாவது, இப்போது இரண்டில் ஒரு கடன் (50 சதவிகிதம்) சொத்து வாங்குவதற்கு அல்ல, மாறாக மொபைல் போன், டிவி, பிரிட்ஜ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கோ, அல்லதுகுடும்பத்தின் வேறு அன்றாடத்தேவைகளுக்கோ வாங்கப்படு கிறது என தெரிய வருகிறது.

இந்தியாவின் மொத்த சில்லறைக் கடன் அதாவது தனிநபர்கள்வாங்கும் கடன்களின் அளவு ரூ.170 லட்சம் கோடிக்கும் மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ்வங்கிதரவுப்படி, 202526 நிதியாண்டில் நாடு முழுவதும் கடன் வழங்கப்படும் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

மொத்தமாக ரூ.44.6 லட்சம் கோடி புதிதாகக் கடனாக வழங்கப்பட்டு, மொத்த கடன் அளவு ரூ.311 லட்சம் கோடியை எட்டியுள்ளது.இதில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.212 லட்சம் கோடி ஆகும். இதேபோல வங்கி அல்லாத நிறுவனங்கள் வழங்கிய கடன் ரூ.99 லட்சம் கோடியாக உள்ளது.இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்முன்பேகடன் வாங்கியிருந்த பழைய வாடிக்கையாளர் களுக்குத்தான் இப்போது வங்கிகள் அதிகம் கடன் கொடுக்கின்றன.

முதன்முறையாகக் கடன் வாங்கும் புதிய வாடிக்கையாளர்களின் பங்கு 2016-17 இல் 32சதவிகிதமாக இருந்த நிலையில் 2025-26 இல் வெறும் 13 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதற்கு காரணம் சிபில் மதிப்பு என கூறப்படுகிறது. ஏற்கெனவே கடன் வாங்கி திருப்ப செலுத்தி வருபவர்களால் தான் சிபில் மதிப்பெண்ணை பராமரிக்க முடியும். புதிதாக கடன்வாங்குபவர்களுக்கு சிபில் மதிப்பெண் இருக்காது.

வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன்கொடுக்க சிபில் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்திருப்பதால் அத்தியாவசிய தேவைக்கு புதிதாக கடன் பெறுபவர்களுக்கு கடன்கிடைக்காத சூழல் உருவாகிறது என்பது முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ளது.ஜிஎஸ்டி, பண மதிப்பிழக்கம், அதன் பிறகு கொரோனா பொதுமுடக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டது.

அதில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்ளவில்லை. மாறாகபெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை அளிப்பது, கடன்தள்ளுபடி செய்வது என அவர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்க உதவி செய்கிறது. ம

றுபுறம் நாட்டின் ஆதாரத்தூணாக இருக்கும் சாமானிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய வேலைவாய்ப்பு உருவாக்கம், ஊதிய உயர்வு என எந்த அத்தியாவசியப் பொருளாதார நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதனால் மக்கள் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.