மின்வாரிய தனியார்மய கொள்கையை கண்டித்து திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 hours before

மின்வாரிய தனியார்மய கொள்கையை கண்டித்து திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர்,அக்.15-மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சத்தியபிரகாசம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருநாவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்வாரிய தனி யார் மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன.