தீக்கதிர் முக்கிய செய்திகள்
10 Oct 2026, 10:44 pm

சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்

மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தைக் கொன்று வருகிறார்கள். மோடி - அமித் ஷா சிறிதளவாவது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் புரிந்துகொண்டிருந்தால் இந்த போராட்டம் நடைபெற்று இருக்குமா? கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் தாக்குதலுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லே

எங்களின் எளிய மற்றும் நியாயமான கோரிக்கை என்னவென்றால், இந்த நாட்டின் அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும் ; ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே. மக்களின் ஜனநாயக உரிமைகளை எவராிடமிருந்தும் பறிக்க முடியாது. ஞானேஷ் குமார் பதவி விலகு, மோடி-ஷாவே பதவி விலகு!, இந்திய அரசியலமைப்பு வாழ்க!

எஸ்எப்ஐ மூத்த தலைவர் ஐசி கோஷ்

தில்லியில் நடப்பதுதான் ஜனநாயகத்தின் தோற்றமா; அமைதியான முறையில் போராடியவர்களைக் கைது செய்கிறார்கள்; வெட்கக்கேடான மோடியும் அமித் ஷாவும் காவல்துறையை ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடுபவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்; மோடி - அமித் ஷாவின் இந்த கொடூரமான செயல் உலகப் போரைப் போன்று உள்ளது. ஒட்டுமொத்த நாடே இந்த போரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எஸ்எப்ஐ பொதுச் செயலாளர் ஆதர்ஷ் எம்.சாஜி

ஞானேஷ் குமார் பாஜகவுக்காக வாக்குகளைத் திருடுகிறார். எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் போராடுவோம். இது சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். நிச்சயமாக இந்தப் போராட்டத்தில் ஜனநாயகம் வெல்லும்.