கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு உயிரிழப்பு
1 hour before

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு உயிரிழப்பு

நாமக்கல், ஆக.14-பள்ளிபாளையம் அருகே திறந்திருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

நமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி குப்புரத்தினம் என்பவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடைய சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐந்து வயதுடைய எருமை மாடு ஒன்று வியாழனன்று காலை மேய்ச்சலுக்கு போயிருந்தது. மற்ற கால்நடைகள் வீடு திரும்பிய நிலையில் ஒன்று மட்டும் வீடு வந்து சேராததால் குப்புரத்தினம் நகரின் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். அப்பொழுது, நகராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதி அருகே மூடப்படாத நிலையில், எட்டடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட செப்டிக் டேங்க் தொட்டியில் எருமை மாடு விழுந்து உயிரிழந்தது. மிக சிறிய அளவிலான தொட்டி என்பதால் உடனடியாக எருமை மாட்டை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 5 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இறந்த நிலையில் எருமை மாட்டின் சடலம் மீட்கப்பட்டது.

பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியிலுள்ள இதுபோன்ற கழிவுநீர் தொட்டியில் குழந்தைகள் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதால், நகராட்சி நிர்வாகத்தினர் சரியானமுறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.