காவிரி திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
16 hours before

காவிரி திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

நாமக்கல், ஆக.10-காவிரி திருமணிமுத்தாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க நாமக்கல்மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட 8 ஆவது மாநாடு ஞாயிறன்று திருச்செங்கோடு கொங்கு சமுதாய கூட்டத்தில் நடைபெற்றது.மாநாட்டிற்கு சங்கமாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு சார்பில் எஸ்.சீனிவாசன் வரவேற்றார். மாநாட்டு கொடியை ஏ.ஆர்.முத்துசாமி ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை எம்.தனேந்திரன் வாசித்தார். மாநாட்டைதுவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு பேசினார். சங்க மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் வேலை அறிக்கையை முன் வைத்தார். பொருளாளர் இ.கோவிந்தராஜ் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.நல்லாகவுண்டர், விதொசமாவட்டத் தலைவர் சி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், காவிரி திருமணிமுத்தாறு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடனைமுழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.பூபதி, மாவட்டச் செயலாளராக ஏ.டி.கண்ணன், மாவட்டப் பொருளாளராக ஆர்.ரவி, மாவட்ட உதவித்தலைவர்களாக ஏ.ஆதிநாராயணன், பி.பெருமாள், ஆர்.வேலாயுதம், ஜே.கிருஷ்ணன், மாவட்ட உதவிச்செயலாளர்களாக என்.ஜோதி, இ.கோவிந்தராஜ், எம்.தனேந்திரன், எஸ்.கே.சிவச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் தலைவர் டி.ரவீந்தரன் உரையாற்றினார்.

முடிவில், எஸ்.கே.சிவச்சந்திரன் நன்றி கூறினார்.