செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் ஆய்வு
1 hour before

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு, அக்.17-வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட த்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலை யில், மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப் பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பருவமழைப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களை வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டுதயார் நிலையில் இருக்க அவர் உத்தரவிட்டார்.

மேலும், கட்டுப் பாட்டு அறை எண்கள் (044-27427412, 044-27427414), கட்டணமில்லா எண் (1077) மற்றும் வாட்ஸ்அப்எண் (94442 72345) வழியாகப் பெறப்படும் புகார்கள் மீது 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்புடன் விரைந்துசெயல்பட அதி காரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் உ.பர்ஹத் பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.