அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பரிசீலனை செங்கொடி சங்கத் தலைவர்களிடம் இணை ஆணையர் உறுதி
3 hours before

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பரிசீலனை செங்கொடி சங்கத் தலைவர்களிடம் இணை ஆணையர் உறுதி

சென்னை, செப். 29 –அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உடனடியாக பரி

சீலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத் தலை வர்களிடம், துணை ஆணையர் உறுதி யளித்துள்ளார்.

சென்னையில் 2013ஆம் ஆண்ட அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவங்களில் முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக 300 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர்.

அதன்பிறகு 25 ரூபாய் உயர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 325 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு மாதம் 20 அல்லது 25 நாட்களுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்நிலையில், செங்கொடி சங்கத்தின் தலைமையில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (செப்.28) ரிப்பன் மாளிகை வளாகத்தில் குவிந்தனர்.

இதனையடுத்து சுகாதாரத் துணை ஆணையர் தாகரே சுபம் தினியாண்டேராவ் மற்றும் நிலம் மற்றும் சொத்து துறையின் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா

ஆகியோர் சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் செங்கொடி சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி, பொதுச்செயலாளர் பி.சீனி

வாசுலு, துணைப் பொதுச் செயலாளர் கள் முனுசாமி, ராஜன் உள்ளிட்டு தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சங்கத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் சமையலருக்கு தினக் கூலியாக 844 ரூபாயும், சமை யல் உதவியாளருக்கு 805 ரூபாயும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி அம்மா உணவக ஊழியர்க ளுக்கு ஊதியம் தருவதுடன், அக விலைப்படியை சேர்த்து ஆண்டு தோறும் ஊதியத்தை உயர்த்த வேண்டும்,

சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு, பெண் ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப், மருத்துவ காப்பீடு, குடும்ப பாதுகாப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.

ஊழியர்களுக்கு குழு திட்டத்தை ரத்து செய்து மாநகராட்சி ஊழியர்களாக்கி நேரடியாக சம்பளம் தர வேண்டும், மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்த துணை ஆணை யர், ஊதிய உயர்வு வழங்க உடனடியாக பரிசீலிக்கப்படும் என்றும், இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்தல், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளித்தனர்.